CPTPPவில் சேர்வதற்கு சீனாவின் கருத்துக்கள்
2020-11-19 17:56:53

CPTPP எனப்படும் பசிபிக் கடந்த கூட்டுறவுக்கான விரிவான மற்றும் முன்னேறிய ஒப்பந்தத்தில் சீனா இணைவது தொடர்பான விவகாரம் குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் காவ் ஃபெங் 19ஆம் நாள் கூறுகையில், சீனா ஆக்கபூர்வமான மற்றும் திறந்த மனதுடன் செயல்பட்டு வருகின்றது என்றார். திறப்பு, வெளிப்படை, பரஸ்பர நலன் தந்து கூட்டு வெற்றி பெறுதல் ஆகிய அடிப்படையில் பிரதேச தாராள வர்த்தகத்துக்கு முன்னேற்பாடு செய்ய வேண்டும் என சீனா கருதுகிறது. எந்த பிரதேச தாராள வர்த்தக உடன்படிக்கையும் உலக வர்த்தக அமைப்பின் கோட்பாட்டுக்கினைங்க பொருளாதாரத்தின் உலகமயமாக்கத்தையும் பிரதேசப் பொருளாதாரத்தின் ஒருமைப்பாட்டையும் தூண்டினால் தான் சீனாவின் வரவேற்பை பெறும் என்று அவர் கூறினார்.