அமெரிக்கா, புயல் மழையில் பயணிக்கும் ஒரு பெரிய கப்பல்
2020-11-20 15:31:33

“தற்போதைய அமெரிக்கா புயல் மழையில் பயணிக்கும் ஒரு பெரிய கப்பலைப் போல் உள்ளது. ஆனால் எங்கள் தலைமை மாலுமி கோல்ஃப் விளையாட முடிவு செய்துள்ளார்.” இது, கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த்த் தவறிய வெள்ளை மாளிகையின் மீது அமெரிக்க ஜார்ஜ் டாவ்ன் பல்கலைக்கழகத்தின் சுகாதாரத் துறை நிபுணர் ராலன்ஸ் கோஸ்தீன் அண்மையில் தெரிவித்த விமர்சனம் கூற்று. உள்ளூர் நேரப்படி 18ஆம் நாள் வரை, அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2.5 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

ஆனால் அமெரிக்காவின் சில தலைவர்கள், பொது சுதாகார அபாயம் தீவிரமாகிய இத்தருணத்தில் சமூக வலைதளப் பக்கத்தில் கரோனா வைரஸை மீண்டும் சீன வைரஸ் என்று அழைத்தனர்.

வைரஸின் தோற்றுவாய் அறிவியல் ரீதியான பிரச்சினையாகும். அதனை அரசியல் மயமாக்கம் செய்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. அதற்கு ஓர் அடையாளச் சீட்டு அளிப்பதும் தவறான செயலாகும். அறிவுசார்புக்கு எதிரான அமெரிக்க அதிகார வட்டாரத்தின் வழிக்காட்டலில், சிலர் பாரபட்சமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

எடுத்துக்காட்டாக, கரோனா நோயால் சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் மேம்பாடு உயர்வு என்ற தலைப்பில் அமெரிக்க ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளியல் துறை பேராசிரியர் டைலர் கோவென், ப்ளூம்பர்க் செய்தி நிறுவனத்தில் வெளியிட்டார். இக்கட்டுரையில், அமெரிக்க சமூகம் அல்லல்பட்டு வரும் துன்பத்தை எதிர்கொண்டுள்ளது. ஆனால், அமெரிக்க மக்கள் பலவீனமானதவர்கள் அல்ல என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார்.