உலக வர்த்தக அமைப்பின் 25ஆவது ஆண்டு பேச்சுவார்த்தை
2020-11-20 17:33:53

உலக வர்த்தக அமைப்பின் 25ஆவது ஆண்டு நிறைவையொட்டி, 19ஆம் நாள் இதன் உயர் நிலை பேச்சுவார்த்தை இணையம் மூலம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பல சர்வதேச அமைப்புகளையும், அரசுகளையும், நிறுவனங்களையும் சேர்ந்த பிரதிநிதிகள் கூறுகையில், சர்வதேச வர்த்தக முறைமை இன்றும் நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. வர்த்தகச் சூழல் மாறி வருவதற்கு ஏற்ப, உலக வர்த்தக அமைப்பின் விதிமுறையிலும் சீர்த்திருத்தும் தேவை என்றனர்.

மக்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், கோடிக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்பதற்கும் உலக வர்த்தக அமைப்பு வரலாற்று பூர்வ பங்கினை ஆற்றியுள்ளது. புதிய ரக கரோன வைரஸ் பாதிப்புக் காலத்தில், பல்வேறு உறுப்பு நாடுகளும் இதன் கோட்பாடுகளைப் பின்பற்றி, வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகளை அதிகமாக மேற்கொள்ள வேண்டும் என்று சீனத் துணை வணிக அமைச்சர் தெரிவித்தார்.