உலகப் பொருளாதார மீட்சியை உறுதிசெய்யும் சீனாவின் புதிய வளர்ச்சி
2020-11-20 10:36:48

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 19ஆம் நாள் எபேக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய போது, புதிய வளர்ச்சி அமைப்புமுறையைச் சீனா ஆக்கப்பூர்வமாகக் கட்டியமைக்கும் என்று தெரிவித்தார். இது உலகப் பொருளாதார மீட்சிக்கு வலுவான நம்பிக்கை தந்துள்ளதாக வெளிநாட்டு நிபுணர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதிய வளர்ச்சி அமைப்புமுறையின் கட்டுமானத்தில் சீனா ஈடுபடுவது, தென் கொரியா உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு மேலதிக வணிக வாய்ப்புகளை வழங்கும் என்று தென் கொரிய நவீனப் பொருளாதார ஆய்வகத்தின் புதிய சந்தைப் பிரிவின் தலைவர் ஹான் ஜெய்ஜின் கூறினார்.

சிங்கப்பூர் சர்வதேச அலுவல்கள் ஆய்வகத்தைச் சேர்ந்த உயர் ஆய்வாளர் ஹு யிசான் கூறுகையில், உள்நாட்டுத் தேவையைச் சீனா விரிவாக்குவது, சொந்த நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்கும் அதேவேளையில், ஆசியான் நாடுகள் உள்ளிட்ட அதன் வர்த்தகக் கூட்டாளிகளின் பொருளாதார மீட்சிக்கும் துணை புரியும் என்று தெரிவித்தார்.