நாகா நிலைமை பற்றி ரஷிய - பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் தொடர்பு
2020-11-20 10:01:16

நாகா பிரதேசத்தில் போர் நிறுத்த உடன்படிக்கையினை நடைமுறைப்படுத்துவது குறித்து ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ், பிரான்ஸின் வெளியுறவு அமைச்சர் லேத் லியோங் ஆகியோர் 19ஆம் நாள் தொலைபேசி மூலம் விவாதித்தனர்.

இது தொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் இணையம் வெளியிட்ட செய்தியின்படி, அகதிகள் தாயகத்துக்குப் பாதுகாப்பாகத் திரும்புவதற்கு உதவி செய்வது, நாகா பிரதேசத்தில் பொருளாதாரம் மற்றும் போக்குவரத்தை மீட்பது, ராணுவசார்பற்ற வசதிகள் மற்றும் மனித நேய உதவியை மீட்பது ஆகியவை தற்போதைய கட்டத்தில் தீர்க்கப்பட வேண்டிய முதன்மைப் பிரச்சினைகளாகும் என்று இரு தரப்புகளும் ஒருமனதாகத் தெரிவித்துள்ளன.