ஒன்றாகவே மலையேறி ஒன்றாகவே பள்ளத்தாக்கைக் கடப்போம்: ஷிச்சின்பிங்
2020-11-21 14:57:42

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் (ஏபெக்) 27ஆவது தலைவர்கள் சந்திப்பில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 27ஆம் நாளிரவில் காணொளி வழியாக பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில்,

மலேசியாவில், ஒன்றாகவே மலையேறி ஒன்றாகவே பள்ளத்தாக்கைக் கடப்போம் என்ற பழமொழி உண்டு. தொற்று நோயைச் சமாளிப்பது தற்போதைய மிக அவசரமான கடமையாகும். ஆசிய பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு,  தடுப்பூசி, பொது சுதாகாரம், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புகளை ஆதரிக்கவும், நோய் எதிர்ப்பு மற்றும் பொருளாதார மீட்சிக்கு உதவி அளிக்கவும் சீனா செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.