பல்வேறு நாடுகளுக்கு மேலதிக வாய்ப்புகளை கொண்டு வரும் சீனாவின் புதிய வளர்ச்சி முறை
2020-11-21 23:19:58

புதிய வளர்ச்சி முறையை உருவாக்கும் சீனா, மூடப்படும் சூழ்நிலையில் நடந்து செல்வது அல்ல. மாறாக, விநியோகம் மற்றும் தேவை ஆகிய இரண்டிலும் ஒரே நேரத்தில் நடந்துச் செல்ல வேண்டும். பொருளாதாரத்தின் விடாப்பிடியான தன்மையை மேம்படுத்தும் வேளையில், மேலும் உயர் நிலையிலான திறப்புப் பொருளாதாரம் என்ற புதிய அமைப்புமுறையை உருவாக்க வேண்டும். இது, பல்வேறு நாடுகள், சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி சாதனைகளைப் பகிர்ந்து கொள்வதற்கு மேலதிக வாய்ப்புகளை ஏற்படுத்தும். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 21ஆம் நாள் சனிக்கிழமை  பெய்ஜிங்கில் காணொளிக் காட்சி வழியாக ஜி-20 அமைப்பின் 15ஆவது உச்சி மாநாட்டின் முதல் கட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது இதைத் தெரிவித்தார்.