கரோனா பரிசோதனை அதிகரிப்பு:இந்தியா
2020-11-21 18:51:03

அமெரிக்காவைத் தொடர்ந்து, புதிய ரக கரோனா வைரஸால் 90இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா 20ஆம் நாள் மாறியது. தற்போது, இந்தியாவின் சில பிரதேசங்களில், வைரஸின் கடும் பாதிப்பினால் புதிய கட்டுபாட்டு நடவடிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்திய சுகாதார அமைப்பு 20-ஆம் நாள் முற்பகல் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 24மணி நேரத்தில், 45,882பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், சமூக நடவடிக்கைகளுக்கான கட்டுபாடு படிப்படியாக நீக்கப்படுவதோடு, கரோனா பரிசோதனைத் திறனும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றத்தின் படி, நவம்பர் 19-ஆம் நாள் வரை, இந்தியாவில் சுமார் 13கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 19ஆம் நாளில் மட்டும், 10இலட்சத்து 80ஆயிரம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.