அடிப்படை வசதிகள் வங்கி நிறுவ:பிரிட்டன் அறிவிப்பு
2020-11-21 18:10:39

அடிப்படை வசதிகள் துறையில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் தேசிய அடிப்படை வசதிகள் வங்கியை நிறுவ போவதாக பிரிட்டன் அரசு 20ஆம் நாள் அறிவித்தது.

பிரிட்டன் நிதி அமைச்சகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், போக்குவரத்து, புதுப்பிக்கவல்ல எரியாற்றல், எண்ணியல் இணையம் உள்ளிட்ட முக்கியமான துறைகளில் இவ்வங்கி முதலீடு செய்யவுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

அடிப்படை வசதிகள் துறையில் செய்யப்படும் முதலீடு, பிரிட்டன் கொவைட்-19 நோய் பாதிப்பிலிருந்து விடுபட்டு, மேலும் சிறந்த மற்றும் பசுமையான வளர்ச்சி பெறுவதற்கு முக்கிய உந்து சக்தியாகத் திகழும் என்று அந்நாட்டு நிதி அமைச்சர் தெரிவித்தார்.