ஆசிய-பசிபிக் பொது சமூகம் குறித்து ஷிச்சின்பிங் உரை
2020-11-21 17:00:30

ஆசிய-பசிபிக் பொது சமூகம் குறித்து ஷிச்சின்பிங் உரை

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 20ஆம் நாள் பெய்ஜிங்கில் காணொளி வழியாக, ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 27ஆவது தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, ஆசிய-பசிபிக் பொது சமூகத்தைக் கூட்டாக உருவாக்க வேண்டும் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

2020ஆம் ஆண்டைத் தொடர்ந்து, ஏபெக் ஒத்துழைப்பின் எதிர்காலத்தைத் புதிய துவக்கப் புள்ளியாகக் கொண்டு, ஏபெக் ஒத்துழைப்பின் புதிய கட்டத்தைத் துவங்கி, உள்ளடக்கும் தன்மை, புத்தாக்க வளர்ச்சி, ஒன்றுடன் ஒன்று இணைப்பு, கூட்டு வெற்றி முதலியவற்றை கொண்ட ஆசிய-பசிபிக் பொது சமூகத்தைக் கூட்டாக உருவாக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஆசிய-பசிபிக் பொது சமூகம் குறித்து ஷிச்சின்பிங் உரை

ஆசிய-பசிபிக் பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் அமைதி மற்றும் செழுமையான எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்கி, மனித குலத்தின் பொது சமூகத்தை உருவாக்கும் இலக்கை நோக்கி இடைவிடாமல் முன்னேற சீனா விரும்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.