சின்ச்சியாங்கில் ஒரு கரோனா நோயாளி கூட இல்லை
2020-11-21 18:24:29

சீனாவின் சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுகாதார ஆணையம் வெளியிட்ட புதிய தகவலின்படி, நவம்பர் 20ஆம் நாள் சின்ச்சியாங் பிரதேசத்தில் புதிதாகக் கரோனா தொற்றுக்குள்ளானவர் மற்றும் அறிகுறியற்ற பாதிப்பாளர் என்று எவரும் இல்லை. காஷ்கர் பகுதியில் அறிகுறியில்லாமல் பாதிப்புக்குள்ளான கடைசி 2 பேர்  மருத்துவக் கண்காணிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

அக்டோபர் 24ஆம் நாள் முதல் நவம்பர் 20ஆம் நாள் வரை, சின்ச்சியாங் பிரதேசத்தில் பாதிக்கப்பட்டிருந்த 78 பேர் மருத்துவமனையில் குணமடைந்து வீடு திரும்பினர். அறிகுறியில்லாமல் தொற்றுக்குள்ளான 352 பேர் மருத்துவக் கண்காணிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.