உலக மக்கள் வாங்க கூடிய  விலையில் பொதுப் பொருளாக்கி தடுப்பூசியை விநியோகிக்கும் சீனா
2020-11-21 23:11:42

ஜி-20 நாடுகள் குழுவின் 15ஆவது உச்சி மாநாட்டின் முதல் கட்டக் கூட்டம் 21ஆம் நாள் சனிக்கிழமை காணொளி வழியாக நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெய்ஜிங்கில் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

புதிய ரக கரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி குறித்த சர்வதேச ஒத்துழைப்பை சீனா ஆக்கப்பூர்வமாக ஆதரித்து வருகிறது. கரோனா தடுப்பூசி செயல்பாட்டுத் திட்டத்தில் சேர்ந்துள்ள சீனா, பிற வளரும் நாடுகளுக்கு  உதவி மற்றும் ஆதரவு அளிக்கவும், உலக மக்கள் வாங்க கூடிய  விலையில் பொதுப் பொருளாக்கி தடுப்பூசியை விநியோகிக்கவும் வாக்குறுதியை அளிக்கிறது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.