பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிப் பணிக் கூட்டம்
2020-11-24 15:34:40

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும், சர்வதேச ஊனமுற்றவர்களுக்கான பாரலிம்பிக் கமிட்டியும், பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டிப் போட்டி மற்றும் ஊனமுற்றவர்களுக்கான பாரலிம்பிக் போட்டி பணி குறித்த பரிசீலனை கூட்டத்தை அண்மையில் காணொலி வழியாக நடத்தின. இக்கூட்டத்திற்குப்  பெய்ஜிங் மாநகராட்சியின் துணை மேயரும், பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் துணை செயல் தலைவருமான சாங்ச்சியென்தோங், 2022ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஆண்டோனியோ சாமாராஷ் ஆகிய இருவரும் கூட்டாகத் தலைமை தாங்கினர்.

இக்கூட்டத்தில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குத் தேவையான போக்குவரத்து, உணவு, சந்தை, பிரச்சாரம், ஒலிம்பிக் கிராமம், குளிர்கால ஊனமுற்றவர்களுக்கான பாரலிம்பிக் போட்டி முதலியவை விவாதிக்கப்பட்டன.