வெற்றிகரமாக நிலாவில் தரையிறங்கிய சாங் ஏ-5
2020-12-02 14:02:16

வெற்றிகரமாக நிலாவில் தரையிறங்கிய சாங் ஏ-5

சாங் ஏ - 5 சந்திர மண்டல ஆய்வுக் கலம் 1 ஆம் நாளிரவு நிலாவின் முன்பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. இந்த ஆய்வுக்கலமானது அடுத்துவரும் 2 நாட்களுக்கு நிலாவின் முன்பகுதியில் மாதிரிகளைச் சேகரிக்கும் பணியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும்.

இது குறித்து, பெய்ஜிங் விண்வெளி விமானக் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் ஹெ ச்சுன் கூறுகையில், இந்த கட்டுபாட்டில் தவறின்மை விகிதம் மிக அதிகமென்றும், இது அடுத்தபடியான வேலைக்கு உறுதியான அடிப்படையை உருவாக்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.