© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
டிசம்பர் 3ஆம் நாள் இரவு 11:10 மணியளவில் சீனாவின் சாங் ஏ 5 சந்திர மண்டல ஆய்வுக் கலத்தின் அசெண்டர் பகுதி சந்திரனின் மேற்பரப்பில் எரி பற்ற வைத்தது. விசைப்பொறி இயங்கத் தொடங்கிய 6 நிமிடங்களுக்கு பிறகு, சந்திர மண்ணின் மாதிரிகளை ஏற்றிச்சென்ற அசெண்டரைச் சந்திரச் சுற்றுப்பாதையில் செலுத்தியது. அதனையடுத்து நில உலகுக்குப் புறம்பான கிரகத்தில் சீன விண்கலம் முதன்முறையாகப் பறக்கத் தொடங்கியது. சீனத்தேசிய விண்வெளிப் பணியகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
புறப்படும் முன்பாக, சந்திரனின் மேற்பரப்பில் சீனத் தேசியக் கொடி நிலைநாட்டப்பட்டு அசெண்டரையும் லேண்டரையும் பிரிக்கும் பணி நிறைவேற்றப்பட்டன. சந்திரனின் மேற்பரப்பில் தேசியக் கொடியை தனி முறையில் சீனா காட்சிப்படுத்துவது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.