புவிக்கு திரும்ப தயாராகும் சாங்ஏ-5 விண்கலன்
2020-12-06 16:10:06

சந்திரன் ஆய்வுக்காக அதனுடைய சுற்றுப்பாதையில் சீனாவின் சாங்ஏ-5 விண்கலனின் ஏறும் இயந்திரமும், புவிக்கு திரும்பும் இயந்திரமும் டிசம்பர் 6ஆம் நாள் காலை 5:42 மணிக்கு வெற்றிகரமாக ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. காலை 6:12 மணிக்கு, நிலாவின் மண் மாதிரிகள் பாதுகாப்புடன் திரும்பும் இயந்திரத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளது என்று சீனத் தேசிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

புவிக்கு திரும்ப தயாராகும் சாங்ஏ-5 விண்கலன்

நிலாவின் சுற்றுப்பாதையில் விண்கலன் ஒன்றிணைக்கும் கடமையை சீனா நிறைவேற்றியது இதுவே முதல்முறையாகும்.

புவிக்கு திரும்ப தயாராகும் சாங்ஏ-5 விண்கலன்

மேலும், அதே நாள் 12:35 மணிக்கு திரும்பும் இயந்திரம், ஏறும் இயந்திரத்துடன் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இந்த இயந்திரம், உரிய நேரத்தில் நிலாவின் மண்திரிகளுடன் புவிக்கு திரும்ப தயார் நிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்