6 மாத கால சுற்றுலா நுழைவு இசைவு – இலங்கை
2020-12-08 10:02:24

இலங்கையில் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கும்போது சுற்றுலாப் பயணிகளுக்கு 6 மாத கால சுற்றுலா நுழைவு இசைவு வழங்குவதற்கு சுற்றுலா அமைச்சகம் திங்கள்கிழமை பரிந்துரை செய்துள்ளது. தற்போது ஒரு மாத காலம் சுற்றுலா நுழைவு இசைவு விதிமுறை நடைமுறையில் உள்ளது.

புதிய சுற்று வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான ஆலோசனையின்போது சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்னா ரணதுங்கா இவ்வாறு கூறியுள்ளார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, குறைந்தபட்சம் 14 நாள்கள் இலங்கையில் தங்குவதும், இணைய வழியாக நுழைவு இசைவுக்கு விண்ணிப்பிப்பதும் கட்டாயம். மேலும், நுழைவு இசைவுக் கட்டணத்தைத் தவிர, கொவைட்-19 தொடர்பான 3 பிசிஆர் சோதனை அல்லது ஏன்டிஜென் சோதனைக்கான கட்டணத்தையும் பயணிகள் செலுத்த வேண்டும்.

இலங்கையை அடைந்தவுடன் முதலாவது பிசிஆர் சோதனையும், 5 முதல் 7 நாள்களுக்குப் பிறகு 2ஆவது பிசிஆர் சோதனையும் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.