நிலாவின் மண் மாதிரிகளுடன் புவிக்கு திரும்பியுள்ள சாங் ஏ-5 விண்கலம்
2020-12-17 09:04:38

நிலாவின் மண் மாதிரிகளுடன் புவிக்கு திரும்பியுள்ள சாங் ஏ-5 விண்கலம்

சந்திரன் ஆய்வுக்கு சீனா அனுப்பிய சாங் ஏ-5 விண்கலம் சந்திர மாதிரிகளுடன், டிசம்பர் 17ஆம் நாள் அதிகாலை 1:59 மணிக்கு சீனாவின் உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள திட்டமிட்ட பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

நிலாவின் மண் மாதிரிகளுடன் புவிக்கு திரும்பியுள்ள சாங் ஏ-5 விண்கலம்

முதன்முறையாக, பிற கோளில் இருந்து மாதிரிகளை எடுத்து புவிக்கு திரும்பும் திட்டத்தை சீனா வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

சாங் ஏ-5 விண்கலம், கடந்த நவம்பர் 24ஆம் நாள் ஹைனான் மாநிலத்தின் வென்சாங் ஏவு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.  டிசம்பர் முதல் நாள், இந்த விண்கலன் நிலாவில் பாதுகாப்பாகத் தரையிறங்கி, மாதிரிகள் சேகரிக்கும் பணியை மேற்கொண்டது.

சாங் ஏ -5 விண்கலன் பயணமானது, சீனாவில் தற்போது வரை இல்லாத அளவிற்கு மிக சிக்கலான விண்வெளிச் செயல்திட்டமாக விளங்குகிறது. கூடுதலாக, இந்தத் திட்டத்தின் மூலம்,  தொழில் நுட்பங்களின் புத்தாக்கம் செய்யப்பட்டுள்ளது. விண்வெளித் தொழில் நுட்பத்தின் மேம்பாடு, சந்திரனின் அறிவியல் ஆய்வு மற்றும் கோள்களிடையேயான ஆய்வு ஆகியவற்றில், சாங் ஏ -5 விண்கலன் பயணம், மைல் கல் முக்கியத்துவம் வாய்ந்தது குறிப்பிடத்தக்கது.