ஷிச்சின்பிங்கின் 2021 புத்தாண்டுரை
2020-12-31 19:57:00

ஷிச்சின்பிங்கின் 2021 புத்தாண்டுரை_fororder_rBABCl_tuO-ATisvAAAAAAAAAAA572.1062x598.862x485

2021ஆம் ஆண்டை முன்னிட்டு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் சீன ஊடகக் குழுமம் மற்றும் இணையம் மூலம் 2021ஆம் ஆண்டு புத்தாண்டு உரை நிகழ்த்தினார்.

அனைவருக்கும் வணக்கம். 2021ஆம் ஆண்டு வரவுள்ளது. பெய்ஜிங்கிலிருந்து அனைவருக்கும் புத்தாண்டு நற்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

2020ஆம் ஆண்டு மிகவும் அசாதாரண ஆண்டாகும். மக்களே முதன்மை மற்றும் உயிர் முக்கியம் என்ற கோட்பாட்டைக் கடைப்பிடித்து, நாங்கள் ஒன்றிணைந்து அயரா முயற்சி மூலம் திடீரென பரவிய கொவிட்-19 நோய் பரவலைச் சமாளித்து வருகின்றோம். கஷ்டமான காலத்தில், சீன மக்கள் இன்னல்களைப் புறக்கணித்து ஒருமித்து, கடினமாக உழைத்து, தனிநபர் நலன்களைக் கைவிட்டுவிட்டு ஒருவருக்கு ஒருவர் உதவி அளித்து வருகின்றனர். மருத்துவப் பணியளர்கள், படை வீரர்கள், அறிவியல் ஆய்வாளர்கள், குடியிருப்புப் பிரதேசத்தின் பணியாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் என, பதின்ம வயதினர் முதல் முதியோர் வரை எண்ணற்ற மக்கள் தங்களது கடமைகளை நிறைவேற்றி, உயிர்களைப் பாதுகாக்கும் வலுவான பாதுகாப்புச் சுவரை உருவாக்கியுள்ளனர். ஒவ்வொருவரும் சிறப்பாகப் பங்காற்றியவர்கள் பாராட்டப்படத்தக்கவர்கள். இந்தப் போக்கில் உருவான மாபெரும் நோய் எதிர்ப்பு எழுச்சி அனைவரையும் கவர்ந்துள்ளது. பொது மக்களே வீரர்களாவர்! மேலும், எதிர்பாராதவாறு நோய் தொற்றுக்கு உள்ளான அனைவருக்கும் எனது உளமார ஆறுதலை தெரிவித்து கொள்கின்றேன். நோய்க்கு எதிரான போராட்டத்தில் பங்காற்றிய அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்து வருகின்றேன். எனது தாய்நாடு மற்றும் மக்களை நினைத்து பெருமை அடைகின்றேன்!

இன்னல்களிலேயே வீரம் கண்டறியப்படும். நோய் பாதிப்பைச் சமாளித்து சீன மக்கள் மாபெரும் சமூக மற்றும் பொருளாதார சாதனைகளைப் படைத்துள்ளனர். 13ஆவது ஐந்தாண்டு திட்டம் சிறப்பாக நிறைவேற்றப்பட்டது. 14ஆவது ஐந்தாண்டு திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. புதிய வளர்ச்சி கட்டமைப்பு வேகமாக உருவாகி வருகின்றது. உயர் தர வளர்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உலகின் முக்கிய பொருளாதார நாடுகளில் சீனா முதன்முதலாகப் பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளது. 2020ஆம் ஆண்டு சீனாவின் மொத்த உற்பத்தி மதிப்பு 100 இலட்சம் கோடி யுவான் என்ற புதிய பதிவை உருவாக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தவிரவும், சீனாவின் தானிய உற்பத்தி 17 ஆண்டுகள் தொடர்ச்சியாக அறுவடை பெற்றுள்ளது. தியன்வென்-1, சாங்ஏ-5, ஃபென்துசே உள்பட, அறிவியல் ஆய்வுத் துறையில் பல சாதனைகளைப் படைத்துள்ளோம். ஹைனான் சுயேச்சை வர்த்தகத் துறைமுகத்தின் கட்டுமானம் சுமூகமாக நடைபெற்று வருகின்றது. அதேவேளையில், கடும் வெள்ளப்பெருக்கைச் சமாளித்துள்ளோம். பரந்த படைவீரர்களும் மக்களும் ஒன்றுபட்டு பேரிடர் நீக்கப் பணியில் ஈடுபட்டு, பாதிப்புகளை இயன்ற அளவில் குறைத்துள்ளனர். 13 மாநிலங்கள், மாநகரங்கள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களில் பயணம் மேற்கொண்டேன். நோய் தடுப்பில் அனைவரும் உணர்வுப்பூர்வமாகவும் கண்டிப்பான முறையையும் கடைபிடித்து உற்பத்தியில் விரைவாக ஈடுபட்டு வருகின்றனர். சீன மக்கள் தன்னம்பிக்கையையும் திறமையையும் சிறப்பாக வெளிப்படுத்துகின்றனர் என்று இப்பயணத்தில் மகிழ்வுடன் அறிந்து கொண்டேன்.

2020ஆம் ஆண்டு, குறிப்பிட்ட வசதி படைத்த சமூகத்தைப் பன்முகங்களிலும் கட்டியமைக்கும் பணியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனையைப் பெற்றுள்ளோம். வறுமை ஒழிப்புப் பணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. கொடிய வறுமை நீக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளின் முயற்சி மூலம், கிராமப்புறங்களில் தற்போதைய வரையறையின்படி வறுமையில் இருந்த மக்கள் அனைவரும் 832 வறுமை வட்டங்களும் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர். மிக வறுமையான 14 பிரதேசங்களில் பணி பயணம் மேற்கொண்டேன். அங்கு பரந்த தோழர்கள் மற்றும் மக்களின் கைவிடா முயற்சி என்ற எழுச்சி எனது மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. முயற்சிகளின் மூலம் கிராமப்புறங்களில் கூட்டு செழுமை என்ற இலக்கு நோக்கி தொடர்ந்து பாடுபடுவோம்.

இவ்வாண்டு, ஷென்சேன் உள்ளிட்ட பொருளாதார சிறப்பு மண்டலங்களின் 40ஆவது ஆண்டு நிறைவையும் ஷாங்காய் புதுங் பிரதேசம் திறக்கப்பட்ட 30ஆவது ஆண்டு நிறைவையும் கொண்டாடினோம். தற்போது இவை நாடளவில் வளர்ச்சி மற்றும் அறிவியல் புத்தாக்கத்துக்கான  முன் மாதிரிகளாகவும் மாறியுள்ளன. சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு மூலம் வளர்ச்சித் துறையில் பல அற்புதங்கள் ஏற்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இத்தகைய “வசந்தக் கதைகள்” தொடரும் என்பது உறுதி.

கடந்த ஓராண்டில், மனித குலத்தின் பொது எதிர்காலத்தின் அர்த்தத்தை நாங்கள் மேலும் அறிந்து கொண்டுள்ளோம். உலகளவில் பல புதிய மற்றும் பழைய நண்பர்களுடன் தொடர்பு கொண்டதுடன், இணையம் மூலம் நடத்தப்பட்ட பல கூட்டங்களில் கலந்து கொண்டேன். இவற்றில், ஒற்றுமையுடன் நோய் தடுப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்று பல முறை தெரிவிக்கப்பட்டன. தற்போது, நோய் தடுப்புப் பணி இன்னும் நிறைவடையவில்லை. நோய் பாதிப்பைச் சமாளித்து மேலும் அழகான புவி தாயகத்தைக் கட்டியமைக்க  உலக மக்கள் ஒன்றாக இணைந்து ஒத்துழைக்க வேண்டும்.

2021ஆம் ஆண்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தனது 100ஆவது ஆண்டு நிறைவை வரவேற்கவுள்ளது. கடந்த நூறு ஆண்டுகளில் பல கஷ்டங்கள் மற்றும் நிகழ்வுகளை எதிர்கொண்ட போதிலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி  தனது பொறுப்பை எப்போதுமே மறக்கவில்லை. ஷாங்காயிலுள்ள ஷ்குமன் கட்டிடம் முதல் ஜியாசிங்கிலுள்ள தெற் ஏரி வரை, மக்கள் மற்றும் சீன தேசத்தின் விருப்பத்துக்கிணங்க பல்வகை இன்னல்களைச் சமாளித்து சீனாவின் வளர்ச்சியை முன்னெடுக்கும் மாபெரும் சக்தியாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாறியுள்ளது. கட்சியின் நூறு ஆண்டுகள் நிறைவை மகிழ்ச்சியாக வரவேற்கும் அதேவேளையில் மேலும் பெரும் இலட்சியத்தை நாட வேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றோம். பொது மக்களை மையமாகக் கொண்டு, துவக்க குறிக்கோளை மறக்காமல் பொறுப்புணர்வுடன் பாடுபட்டு வருகின்றோம். சீனத் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சியை நனவாக்குவது உறுதி என்று நம்புகின்றோம்.

சோஷலிச நவீனமயமாக்கத்தைக் கட்டியமைப்பதற்கான புதிய காலக்கட்டத்தில், கடின உழைப்பு மூலம் தொடர்ந்து உறுதியுடன் முன்னேறுகின்றோம். மேலும் ஒளிமயமான எதிர்காலத்தை வரவேற்கின்றோம்.

தற்போது, உலகளவில் பல குடும்பத்தினர்கள் ஒருமித்து மகிழ்ச்சி அடைகின்றனர். புத்தாண்டு வலரவுள்ளது. உலக அமைதி மற்றும் வளர்ச்சி பெற வாழ்த்துகின்றேன். மக்கள் இன்பமாக வாழ வாழ்த்துகின்றேன்.

நன்றி!