சுங்க வரியை அதிகரிக்கும் அமெரிக்கா
2021-01-12 17:05:56

ஜனவரி 12ஆம் நாள் முதல் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யும் விமானப் பாகங்கள், திராட்சை மது உள்ளிட்ட பொருட்களின் மீதான சுங்க வரி அதிகரிப்பதாக அமெரிக்க சுங்கத் துறை மற்றும் எல்லை பாதுகாப்பு வாரியம் 11ஆம் நாள் அறிவித்தது.

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட விமானப் பாகங்களின் மீது 15 விழுக்காட்டுச் சுங்க வரியும், திராட்சை மது மீது 25 விழுக்காட்டுச் சுங்க வரியும் அமெரிக்கா அதிகரிக்கும். புதிய வரி வசூலிப்பு விதிகள் 12ஆம் நாள் தொடங்கி அமலுக்கு வரும் என்பது குறிப்பிடப்பட்டது.