கிர்கிஸ்தான் குடியரசு புதிய அரசுத் தலைவருக்கு வாழ்த்துகள்:ஷிச்சின்பிங்
2021-01-12 20:55:24

கிர்கிஸ்தான் குடியரசின் புதிய அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சத்யர் நர்கோஜோவிச ஜபரோவுக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வாழ்த்து தெரிவித்தார்.

சீனாவும் கிர்கிஸ்தான் குடியரசும் தூதாண்மையை உருவாக்கிய 29 ஆண்டுகளில், இரு நாட்டு வளர்ச்சி மாபெரும் சாதனைகளைப் பெற்றுள்ளது. கிரிகிஸ்தான் குடியரசுடன் இணைந்து, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்மானத்தை வாய்ப்பாக பயன்படுத்தி, இரு நாட்டு ஒத்துழைப்பை ஆழமாக்கி, இரு நாடுகளுக்கும் இரு நாட்டு மக்களுக்கும் நலன்களை உருவாக்க வேண்டுமென சீனா விரும்புகின்றது என்று ஷிச்சின்பிங் கூறினார்.