ஒரே கோள் என்ற உச்சிமாநாட்டில் ஹான் ட்சேங் உரை
2021-01-12 17:30:53

ஒரே கோள் என்ற உச்சிமாநாட்டில் ஹான் ட்சேங் உரை_fororder_1126971287_16104207657051n

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் நிலையான உறுப்பினரும் துணைத் தலைமை அமைச்சருமான ஹான் ட்சேங், 11ஆம் நாள் காணொளி வழியில் ஒரே கோள் என்ற உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், அண்டத்தில் ஒரு பூமி மட்டுமே உள்ளது. மனிதர்கள் ஒரு தாயகத்தை கூட்டாகக் கொண்டுள்ளனர். மனிதகுலத்தின் தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்கும் வகையில் மனிதர்கள் இயற்கையுடன் இணக்கமாக வாழக் கூடிய பூமி நமக்கு வேண்டும். உயிரின பல்வகைத் தன்மைக்கான பொது ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட தரப்புகளின் 15ஆவது மாநாடு இவ்வாண்டு சீனாவின் குன்மிங் நகரில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் 2020ஆம் ஆண்டுக்குப் பின் உலக உயிரின பல்வகைத் தன்மைக்கான கட்டுக்கோப்பு வகுக்கப்பட்டு, வரும் 10 ஆண்டுகளில் உயிரின பல்வகைத் தன்மை பாதுகாப்புக்கான செயல்திட்டம் வரையப்பட உள்ளது. நாம் ஒன்றாக இணைந்து கூட்டு முயற்சியுடன் செயல்பட்டு, பூமியிலுள்ள உயிரினங்கள் கூட்டாகப் பகிர்ந்து கொள்ளக் கூடிய பொதுச் சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.