சோஷலிச நவீனமயமாக்க நாட்டைப் பன்முகங்களிலும் கட்டியமைப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும்:ஷிச்சின்பிங்
2021-01-12 10:05:42

சீன மாநிலம் மற்றும் அமைச்சர் நிலைத் தலைவர்களின் சிறப்புக் கருத்தரங்கு 11ஆம் நாள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கட்சி பயிலகத்தில் தொடங்கியது. கட்சியின் மத்திய கமிட்டி பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

இக்கருத்தரங்கில், புதிய வளர்ச்சிக் காலக் கட்டத்தில், புதிய வளர்ச்சிக் கண்ணோட்டத்தை ஆழமாகப் பின்பற்றி, புதிய வளர்ச்சி நிலைமையை உருவாக்குவதை விரைவுபடுத்தி, 14ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் தரமிக்க வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் எனக் குறிப்பிட்ட ஷிச்சின்பிங்,  சோஷலிச நவீனமயமாக்க நாட்டைப் பன்முகங்களிலும் கட்டியமைக்கும் பணியைச் சீராக தொடங்குவதை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.