கரோனா தடுப்பூசி மற்றும் வைரஸ் ஆய்வு:சீனாவுடன் உலக சுகாதார அமைப்பின் ஒத்துழைப்பு
2021-01-12 17:33:06

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் தெட்ரோஸ் 11ஆம் நாள் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், கரோனா தடுப்பூசி, வைரஸ் தோற்ற ஆய்வு உள்ளிட்ட துறைகளில் சீனாவுடன் ஒத்துழைப்பு மேற்கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும், பயனுள்ள பாதுகாப்பான கரோனா தடுப்பூசியை கூடிய விரைவில் வழங்கி, உலகளவில் தடுப்பூசியின் சமமான பங்கீட்டை விரைவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கென்யா, ஜப்பான், ரஷியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நிபுணர்கள் இடம்பெற்றுள்ள சர்வதேச நிபுணர் குழு சீனாவுக்குச் சென்று, சீனப் பணியாளர்களுடன் இணைந்து புதிய ரக கரோனா வைரஸின் தோற்றம் பற்றி ஆய்வு மேற்கொள்ள உள்ளது. மேலும், சீனாவின் சைனொவேக் நிறுவனம், சைனொஃபார்ம் குழுமம் ஆகியவை உற்பத்தி செய்யும் தடுப்பு மருந்துகளை எதிர்காலத்தில் அவசரப் பயன்பாட்டுப் பட்டியலில் சேர்க்கும் விதம், உலக சுகாதார அமைப்பின் மற்றொரு குழு அவற்றுடன் ஒத்துழைத்து, அவற்றின் உற்பத்தி வரையறை போன்ற நிலைமையை மதிப்பீடு செய்து கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.