திட்டப்படி நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டி
2021-01-13 10:42:42

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ரத்து செய்வது அல்லது போட்டியை 2024ஆம் ஆண்டுக்கோ 2032ஆம் ஆண்டுக்கோ ஒத்திவைப்பது குறித்த செய்திகள் தவறானவை என்று டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டி அமைப்புக் குழுவின் தலைமைச் செயல் அதிகாரி தோஷ்லொ மூதோ 12ஆம் நாள் தெரிவித்தார். டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியும் ஊனமுற்றவர்களுக்கான பாரலிம்பிக் போட்டியும் திட்டப்படி 2021ஆம் ஆண்டின் கோடைகாலத்தில் நடைபெறவுள்ளதாக இக்குழுவின் தலைவர் மோரி யோஷ்ரோ அன்று நிகழ்த்திய உரையில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஒலிம்பிக் போட்டியை நடத்துவது குறித்து, ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் பொது மக்களிடம் நடத்திய புதிய கருத்துக் கணிப்பின் படி, 80 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட ஜப்பானிய மக்கள் இப்போட்டியை ஒத்தி வைக்கவோ ரத்து செய்யவோ  வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.