சீனத் தடுப்பூசியின் பயனும் பாதுகாப்பும் மிக்கது -- பிரேசியில் மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவு
2021-01-13 10:14:08

பிரேசிலில் நடைபெற்ற மூன்றாவது கட்ட மருத்துவச் சோதனையில் சீனா தயாரித்த கரோனா தடுப்பூசியின் பயன் குறித்த புள்ளிவிவரங்களை உள்ளூர் நேரப்படி ஜனவரி 12ஆம் நாள், பிரேசிலின் முன்னணி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான புட்டான்டன் நிறுவனம், செயின்ட் பால் நகரில் வெளியிட்டுள்ளது. இச்சோதனையில் மரணம் அல்லது கடுமையான தொற்று காணப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அந்நிறுவனம் சீனாவின் கரோனா தடுப்பூசி, பயன்மிக்கது மற்றும் பாதுகாப்பானது எனவும் சான்றளித்துள்ளது. அதனையடுத்து செயின்ட் பால் மாநிலமும் புட்டான்டன் நிறுவனமும் உள்ளூர் நேரப்படி 8ஆம் நாள் பிரேசில் சுகாதாரக் கண்காணிப்பு ஆணையத்திடம்  இத்தடுப்பூசியின் அவசரக் காலப் பயன்பாட்டு உரிமத்திற்கு அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்துள்ளன.