ஐ.நா 2030ஆம் ஆண்டு தொடர்வல்ல வளர்ச்சிக்கு சீனாவின் பங்கு
2021-01-13 17:04:02

புதிய யுகத்தில் சீனச் சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பு என்ற வெள்ளையறிக்கையை சீனா வெளியிட்டுள்ளது. இதர வரும் நாடுகளின் வறுமை குறைப்புக்கு ஆதரவு அளித்தல், வேளாண் வளர்ச்சி நிலையை உயர்த்துதல், சமமான கல்வியை மேம்படுத்துதல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், தொழில் மயமாக்க போக்கை முன்னேற்றுதல் ஆகியவற்றின் மூலம் ஐ.நாவின் 2030ஆம் ஆண்டு தொடர்வல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதில் சீனா ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றி வருகின்றது என்று இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

லாவோஸ், மியான்மர், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் வறுமைக் குறைப்பு முன்மாதிரித் திட்டங்களை சீனா செயல்படுத்தி, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு வேளாண் தொழில்நுட்ப நிபுணர் குழுக்களை அனுப்பியது. அதேபோல் நேபாளம், மொசாம்பிக், நமீபியா முதலிய நாடுகளில் பள்ளிகளைக் கட்டியமைத்தது, கியூபா, கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் மின் விநியோக வசதி திட்டங்களின் கட்டுமானங்களை செயல்படுத்தியது.

சில வளரும் நாடுகளில் பொது நலச் சேவை, எரிசக்தி ஆகியவை தொடர்பான உள்கட்டமைப்புத் திட்டங்களை சீனா செயல்படுத்தி, உள்ளூர் மக்களுக்கு நலன்களை வழங்கியது என்றும் சீனா, மக்களே முதன்மை என்ற கொள்கையில் ஊன்றி நின்று, மக்களின் வாழ்வாதாரத்தில் கவனம் செலுத்தி, வளரும் நாடுகளுடன் இணைந்து உலகளாவிய சவால்களை சமாளித்து வருகின்றது என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.