உலகிற்கு நன்மை பயக்கும் சீனப் பொருளாதார மீட்சி
2021-01-13 18:56:49

2021ஆம் ஆண்டில் சீனப் பொருளாதாரம் வலுவான மீட்சியை நனவாக்கும் அதேவேளை, உலகப் பொருளாதார அதிகரிப்புக்கும் ஆக்கப்பூர்வ பங்கினை அளிக்கும் என்று உலக வங்கியின் அதிகாரிகள் பலர் சீனா மற்றும் உலகமயமாக்கத்துக்கான மையம் 13ஆம் நாள் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

உலக வங்கி அண்மையில் வெளியிட்ட உலகப் பொருளாதார எதிர்காலம் பற்றிய அறிக்கையில், சீனப் பொருளாதார அதிகரிப்பு 2 விழுக்காட்டை எட்ட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. சீனப் பொருளாதார மீட்சி உலகப் பொருளாதார அதிகரிப்புக்குத் துணைபுரியும் என்று உலக வங்கியின் சீனா தென் கொரியா மற்றும் மங்கோலியா பணியகத் தலைவர் கூறினார்.

கரோனா தடுப்பூசி பரந்தளவில் நடைமுறைப்படுத்தப்படும் என்ற மதிப்பீட்டின் அடிப்படையில், 2021ஆம் ஆண்டு உலகப் பொருளாதார அதிகரிப்பு 4 விழுக்காட்டை எட்டக் கூடும். இதில் சீனப் பொருளாதாரம் 7.9 விழுக்காட்டில் தொடர்ந்து விரிவாக வாய்ப்புள்ளது என்று அறிக்கையில் மதிப்பிடப்பட்டது. இது குறித்து உலக வங்கியின் தற்காலிக துணைத் தலைவரும் மதிப்பீட்டுப் பணியகத் தலைவருமான அய்கான் கோசெ கூறுகையில், சீனப் பொருளாதார மீட்சி உலகிற்கு நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.