அமெரிக்காவின் மேலாதிக்கவாத திட்டம்
2021-01-13 20:29:45

அமெரிக்க அரசு "இந்து-பசிபிக் நெடுநோக்கு" ஆவணத்தை 30 ஆண்டுகளுக்கு முன்னதாகவே வெளியிட்டது. இதில், தைவானை பாதுகாப்பது, இந்தியாவைப் பயன்படுத்தி, சீனாவைக் கட்டுப்படுத்துவது, இந்து-பசிபிக் பிரதேசத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தன. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவ் லிஜியன் கூறுகையில், இந்த ஆவணம் அமெரிக்காவின் மேலாதிக்கவாத திட்டமாகும். இது, பிரதேச ஒத்துழைப்பு எழுச்சிக்கு புறம்பானது. இது குப்பைத் தொட்டிக்குச் செல்ல வேண்டியது என்றார்.