டிரம்பு பதவி நீக்க மறுப்பு: அமெரிக்க துணை அரசுத் தலைவர்
2021-01-13 10:51:28

அமெரிக்க பிரதிநிதி அவையின் தலைவர் நன்சி பெலோசியும் இதர ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் 25ஆவது சட்டத் திருத்தத்தின் கீழ் நடவடிக்கைகளை மேற்கொண்டு, அரசுத் தலைவர் பதவியிலிருந்து டிரம்பை நீக்க வேண்டுமென கோரியுள்ளனர். ஆனால் ஜனவரி 12ஆம் நாள் அமெரிக்க துணை அரசுத் தலைவர் பேன்ஸ் இக்கோரிக்கையை நிராகரித்தார்.

பெலோசிக்கான கடிடத்தில் பேன்ஸ் கூறுகையில், பதவி நீக்கம், நம் நாட்டின் தலைசிறந்த நலன்களுக்குப் பொருந்தியதில்லை. அதுவும் அரசியல் அமைப்பு சட்டத்துக்குப் பொருந்தியதாக இல்லை என்று குறிப்பிட்டார்.