ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதரின் தைவான் பயணம் ரத்து
2021-01-13 16:04:30

ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதர் கெலி க்ராஃப்டின் தைவான் பயணம் உள்ளிட்ட இந்த வாரத்தில் மேற்கொள்ளவுள்ள அனைத்து பயணத் திட்டங்களையும் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் ரத்து செய்துள்ளது என்று அவ்வமைச்சின் செய்தித்தொடர்பாளர் 12ஆம் நாள் அறிவித்தார்.

கெலி க்ராஃப்ட் ஜனவரி 13 முதல் 15ஆம் நாள் வரை தைவானில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். அவரின் தைவான் பயணம், பைடன் பதவி ஏற்கும் முன், டிரம்பின் அரசு சீனாவின் மீது நடத்திய இன்னொரு பிடிவாதமான செயலாகும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது.