இயல்பு நிலையில் வருகின்ற சீன-ஐரோப்பிய தொடர்வண்டி சேவை
2021-01-19 16:08:46

இயல்பு நிலையில் வருகின்ற சீன-ஐரோப்பிய தொடர்வண்டி சேவை_fororder_src=http---inews.gtimg.com-newsapp_match-0-11766646205-0&refer=http---inews.gtimg

2020ஆம் ஆண்டில், சீன-ஐரோப்பிய தொடர்வண்டி தொடர்ச்சியாகவும் இயல்பாகவும் இயங்கி வருகிறது. சர்வதேச வினியோக மற்றும் உற்பத்திச் சங்கிலியை நிதானப்படுத்துவதற்கும், கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கும் இது முக்கியப் பங்காற்றியுள்ளது.

சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் ஜனவரி 19ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2020ஆம் ஆண்டில் சீன-ஐரோப்பிய தொடர்வண்டி மூலம் 11 லட்சத்து 35 ஆயிரம் பெட்டிகள் அனுப்பப்பட்டன. சரக்குகளின் மொத்த மதிப்பு 5000 கோடி அமெரிக்க டாலராகும். இச்சரக்குகள் 21 நாடுகளைச் சேர்ந்த 92 இடங்களுக்கு அனுப்பப்பட்டன.