சீனாவின் சின்சியாங் எப்படி உள்ளது?நேரில் பார்க்க வேண்டும்!
2021-02-04 19:55:11

ஜெனீவாவிலுள்ள பன்னாட்டுத் தூதரகக் குழுக்கள் மற்றும் ஐ·நாவின் நிறுவனங்களுக்குச் சீனா நடத்திய காணொளி கூட்டத்தில் சீனாவின் சின்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் லாவோஸ் பிரதிநிதி கெய் மேற்கொண்ட பயணம் பற்றி பகிர்ந்து கொண்டார். அனைத்து நாடுகளுக்கும் பொருத்தமான வளர்ச்சிப் பாதை உலகில் இருக்காது. சமூகத்தின் வளர்ச்சி, மனித உரிமை பாதுகாப்பில் சீன அரசு மாபெரும் சாதனைகளை பெற்றுள்ளது என்று அவர் உரைநிகழ்த்திய போது தெரிவித்தார்.

இது கெய் அவரின் கருத்து மட்டும் அல்ல. கடந்த சில ஆண்டுகளில் சின்சியாங் வளர்ச்சி சர்வதேச சமூகத்தின் சாட்சியாக உள்ளது.

மேலும் சீன வெளியுறவு அமைச்சகம் அண்மையில் சின்சியாங் விவகாரம் தொடர்பாகச் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. அதில் சின்சியாங் உய்கூர் இனத்தைச் சேர்ந்த பருத்தி விவசாயி பைக்ரி·சுவூர் கூறுகையில்,சின்சியாங் பற்றிய வதந்தி உருவாக்குபவர் எங்கள் உரிமைகளைப் பேணிக்காக்க விரும்பவில்லை. அவர்கள் எங்கள் வாழ்வாதாரத்தை சீர்குலைக்க முயல்கின்றனர். நாங்கள் இதை உறுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெரிவித்தார்.