சீன-அமெரிக்க உறவு விழிப்புடன் கையாளப்பட வேண்டும்
2021-02-08 21:05:53

அண்மையில், அமெரிக்காவின் புகழ் பெற்ற சிந்தனைக் கிடங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான எதிரெதிர் நிலைமையை தூண்டிவிட்டது. பைடனின் தூதாண்மை கொள்கையில் அமெரிக்காவின் பாதுகாப்பை சீனா அச்சுறுத்தும் என்று முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ கூறினார் இவை, சீன-அமெரிக்க உறவை முழுமையான மோதலுக்கு கொண்டு வர முயன்ற செயல்கள் இவற்றில் தொடர்புடைய நிபுணர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

கடந்த 4 ஆண்டுகளில், அமெரிக்க அரசு செயல்படுத்திய சீனாவுக்கு எதிரான கொள்கைகள் தோல்வியில் தான் முடிந்தன. இவை அமெரிக்காவை தனிமைப்படுத்தியுள்ளன. அமெரிக்க வலது சாரி அமைப்பு அமெரிக்காவின் மிகப்பெரிய எதிரியாகும்.

தற்போதைய உலகில், பனிப்போர், ஆயுதப் போர், வர்த்தகப் போர், தொழில்நுட்ப்ப் போர் ஆகியவை இருந்தாலும், உண்மையான வெற்றியாளர்கள் யாகும் இல்லை. சீன-அமெரிக்க உறவின் உண்மையான இலக்கு எந்த தரப்புக்கும் வெற்றி இல்லை. தொடரவல்ல வளர்ச்சி என்பதே ஆகும்.

அமெரிக்காவின் புதிய அரசு சீனாவுடன் ஒத்துழைக்கும் விருப்பத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வருகிறது. சீன-அமெரிக்க உறவு புதிய கட்டத்தில் நுழைய வாய்ப்புண்டு இந்த முக்கிய நேரத்தில், இரு நாட்டுறவைக் கையள்வதில் அமெரிக்கா விழிப்புடன் செயல்பட வேண்டும்.