சீன - மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய ஒத்துழைப்பு
2021-02-10 10:27:57

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 9ஆம் நாள், காணொலி வழியாக சீனா-மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் உச்சி மாநாட்டுக்குத் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார். இவ்வுரையின் போது, அனைவரது கலந்தாலோசனையின் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பது, அனைத்துத் தரப்புகளும்  நலன் பெறுவது, திறப்பு மற்றும் சகிப்பில் கூட்டு வளர்ச்சி பெறுவது, புத்தாகத்தின் மூலம் இடைவிடாமல் வளர்வது ஆகிய 4 அனுபவங்களை ஷிச்சின்பிங் தொகுத்தார்.

மேலும், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் வைரஸுக்கான இணைப்புத் தடுப்பு பற்றிய பரிமாற்றத்தை வலுப்படுத்தி, தடுப்பூசி ஒத்துழைப்புத் தேவையில் ஆக்கப்பூர்வ கவனம் செலுத்த சீனா விரும்புவதாகவும் இவ்வுச்சி மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷிச்சின் பிங்கின் உரையை அடுத்துப் பேசிய செக் அரசுத் தலைவர் சீனா எமது உண்மையான நண்பராகும் என்பதை உண்மைகள் காட்டுகின்றன என்று கூறினார்.

ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி பெற்று, வளர்ச்சியைக் கூட்டாகத் தேடுவதை நிலைநிறுத்தி, அருமையான எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்கும் வாக்குறுதியை வலுப்படுத்தி, சீனா, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒத்துழைப்பு மேற்கொள்வதன் மூலம் மேலும் திறந்த வாய்ப்புகளை அதிகரித்து, உலகப் பொருளாதார மீட்சிக்கு வலிமையான உந்து ஆற்றலை ஊட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.