தனது செயலுக்கு உரிய விலை கொடுத்த பிபிசி
2021-02-12 18:58:01

பிரிட்டனின் பிபிசி நிறுவனத்தைச் சேர்ந்த உலக செய்தி அலைவரிசை சீனா தொடர்பாக வழங்கிய செய்தியறிக்கை, வானொலி மற்றும் தொலைக்காட்சி மேலாண்மை தொடர்பான விதிகளைக் கடுமையாக மீறி, உண்மையாகவும் பாகுபாட்டற்ற நிலையிலும் இருக்க வேண்டிய தேவைகளை எட்டாமல், சீனாவின் தேசிய நலன் மற்றும் ஒற்றுமைக்கு தீங்குவிளைவித்துள்ளதால், சீனாவில் அதன் சேவைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. புதிய ஆண்டிற்காக அதன் ஒலி மற்றும் ஒளிபரப்பு சேவை விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படாது என்று சீனா பிப்ரவரி 12ஆம் நாள் அறிவித்தது.

தேசிய அரசுரிமை மற்றும் நலனைப் பேணிக்காக்கும் உரிய நடவடிக்கை இதுவாகும். அத்துடன், செய்தியறிக்கையின் உண்மையான மற்றும் புறநிலையான கோட்பாட்டையும் இது வலிமையாகப் பேணிக்காக்கும்.

கடந்த சில மாதங்களாக, பிபிசி நிறுவனம் அவதூறு பரப்பி, சீனாவின் மீது பழி கூறி வருகிறது. சீனாவை எதிர்க்கும் சக்தியின் சித்தாந்தக் கருவியாக விளங்குவதை இது முற்றிலும் வெளிப்படுத்தியுள்ளது. படத்தைத் திருத்தி அமைக்கும் நுட்பம் மட்டும் தெரிந்தால், பிபிசி ஆவணத்திரைப்படத்தை யாராலும் செவ்வனே தயாரிக்க முடியும் என்று இணையப் பயனாளர்கள் நையாண்டி தெரிவித்தனர்.

பல்வேறு நாடுகளின் செய்தியாளர்கள் சீனாவில் பேட்டி காண்பதற்குச் சீனா சட்டப்படி ஆதரவு மற்றும் வசதியை வழங்கி வருகிறது. ஆனால், சீனா மீது தீய நோக்கத்துடன் பழி கூறும் ஊடகங்களை வரவேற்க மாட்டோம்.

பிபிசி நிறுவனம் தற்சோதனை செய்து, படிப்பினையைப் பெற்று, சீனா தொடர்பான போலி செய்தியறிக்கைக்கு வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும்.