சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு பற்றிய மாநாட்டில் ஷி ச்சின்பிங்கின் உரை
2021-02-20 21:17:52

சீன கம்யூனிஸ்ட் கட்சி  மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் சனிக்கிழமை, சிபிசி இந்த ஆண்டு தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் கட்சியின் வரலாற்றைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சீனத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான அவர் கட்சி வரலாறு கற்றல் மற்றும் கல்வி குறித்த பிரச்சாரத்தைத் தொடங்கும் மாநாட்டில் முக்கியமான உரையை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், கட்சி உறுப்பினர்கள் அனைவரும் உயர் மனவுறுதியுடன் சோஷலிச நவீன நாட்டைப் பன்முகங்களிலும் கட்டியமைப்பதற்கான புதிய நிலைமையைத் துவக்கி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.