சீன-அமெரிக்க உறவைக் கையாள்வதில் சீன வெளியுறவு அமைச்சர் ஆலோசனை
2021-02-22 16:40:33

பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு, வேற்றுமையைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை மூலம் சீன-அமெரிக்க உறவு இயல்பான நிலைமைக்குத் திரும்புவதை முன்னேற்றுவது என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கின் துவக்க விழாவில், சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ பிப்ரவரி 22-ஆம் நாள் கலந்துகொண்டார்.

தற்போது, இருதரப்பு உறவிலுள்ள பரந்த அளவிலான பிரச்சினைகள், முக்கிய சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் குறித்து, சீனாவும் அமெரிக்காவும் நேர்மையான மனப்பான்மையுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு தரப்பு மற்றொர் தரப்பின் கொள்கைகளையும் இலக்குகளையும் சரியாக அறிந்துகொண்டு, உணர்ச்சித் தன்மை வாய்ந்த பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தும் பயனுள்ள வழிமுறைகளைத் தேட வேண்டும் என்று வாங்யீ தெரிவித்தார்.

மேலும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் கதவை எப்போதும் திறந்தே வைத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.