சின்ஜியாங்குடன் தொடர்புடைய அமெரிக்க அரசின் பொய்
2021-02-22 20:19:37

தவறான புள்ளிவிவரங்கள் மற்றும் பொய்யான தகவலின் அடிப்படையிலான ஆய்வு அறிக்கையைப் பயன்படுத்தி சின்ஜியாங்கின் சிறுபான்மை தேசிய இனங்களின் மீதான இன ஒழிப்பு படுகொலையைச்  சீன அரசு  மேற்கொள்வது என்று அமெரிக்க அரசு கூறுவது வெறும் கட்டுக்கதையாகும் என்று பிப்ரவரி 18ஆம் நாள் அமெரிக்காவின் செய்தி இணையத் தளமான தி கிரே ஸோன் வெளியிட்ட கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 22ஆம் நாள் இது பற்றி கருத்து தெரிவித்த போது, சொற்களை விட உண்மைகள் முக்கியமானது என்றும் மக்களின் இதயத்தில் நீதி உள்ளது என்றும் கூறினார்.