சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கதை
2021-02-22 15:56:19

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் வெளியுறவுத் தொடர்பு அமைச்சகமும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் கட்சிக் குழுவும் கூட்டாக நடத்திய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கதை பற்றி சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள பிரச்சாரக் கூட்டம் உருமுச்சி நகரில் நடைபெற்றது. 80க்கும் மேலான நாடுகளின் 200 வெளிநாட்டு கட்சிகள், சர்வதேச நிறுவனங்கள், சமூக அமைப்புகள், செய்தி ஊடகங்கள், சிந்தனைக் கிடங்குகள் ஆகியவற்றைச் சேர்ந்த 300க்கும் மேலான பிரதிநிதிகள் இணைய வழியாக இதில் கலந்துகொண்டனர் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் வெளியுறவுத் தொடர்பு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் ஹு சாவ் மிங் 22ஆம் நாள் தெரிவித்தார்.

புதிய யுகத்தில் சீன தனிச்சிறப்புடைய சோஷலிசம் பற்றிய ஷி ச்சின்பிங்கின் சிந்தனையையும் சீனாவின் பல்வேறு இடங்களில்  இது தொடர்பான கதைகளையும் விளக்குவது, இக்கூட்டத்தின் நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.