ஷிச்சின்பிங்-கிர்கிஸ்தான் அரசுத் தலைவர் தொலைபேசியில் தொடர்பு
2021-02-23 10:56:05

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கிர்கிஸ்தான் அரசுத் தலைவர் ஜபரோவ் 22ஆம் நாளிரவு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டனர்.

ஷிச்சின்பிங் கூறுகையில், சீனா, கிஸ்கிஸ்தானுடன் இணைந்து, இரு நாட்டுப் பன்முகக் கூட்டாளியுறவை முன்னேற்ற விரும்புவதாக சுட்டிக்காட்டினார்.

ஜபரோவ் கூறுகையில், கிர்கிஸ்தான் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு சீனா வழங்கிய அரிய உதவிக்கும், கரோனா வைரஸ் தடுப்பில் சீனா கிர்கிஸ்தானுக்கு அளித்து வரும் ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்கிறோம். ஹாங்காங், சின்ஜியாங், தைவான் முதலிய சீனாவின் மைய நலனுடன் தொடர்புடைய பிரச்சினைகள் பற்றி சீனாவுக்கு கிர்கிஸ்தான் ஆதரவளித்து வருகிறது. ஒரே சீனா என்ற கோட்பாட்டைப் பின்பற்றுகிறோம். சீன தொழில் நிறுவனங்கள் கிர்கிஸ்தானில் முதலீடு செய்வதை வரவேற்கிறோம். சீனாவுடன் இணைந்து, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானத்தை முன்னேற்ற விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.