கரோனா தடுப்பூசி கொள்வனவு பற்றிய உலகச் சுகாதார அமைப்பின் கருத்து
2021-02-23 15:24:31

உலகச் சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் பிப்ரவரி 22ஆம் நாள் கூறுகையில், உயர் வருவாய் கொண்ட சில நாடுகள், கரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் மேற்கொண்ட கொள்வனவு ஒப்பந்தங்கள், உலகச் சுகாதார அமைப்பின் கோவேக்ஸ் திட்டத்தைப் பாதித்துள்ளன. இதன் காரணமாக, கோவேக்ஸ் திட்டத்தின் மூலம் கொள்வனவு செய்யப்பட்டும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றார்.

மேலும், உயர் வருவாய் கொண்ட நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளும், தடுப்பூசிகளை உடனடியாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள், கோவேக்ஸ் திட்டத்துடன் முதலில் ஒப்பந்தங்களை உருவாக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.