ஐ.நா மனித உரிமைச் செயற்குழுவின் 46ஆவது கூட்டத்தொடர்
2021-02-23 09:45:05

ஐ.நா மனித உரிமைச் செயற்குழுவின் 46ஆவது கூட்டத்தொடர்_fororder_%5c%5c172.100.100.3%5ctemp%5c9500033%5c1%5c9500033_1_6016_f5701b6b-5dca-4a74-bd01-9aac97ad99fe

ஐ.நா மனித உரிமை செயற்குழுவின் 46ஆவது கூட்டத்தொடர் 22ஆம் நாள் ஜெனிவாவில் தொடங்கியது.

புதிய ரக கரோனா வைரஸ் உலகளவில் பரவி வரும் நிலையில், மனிதர்கள், பல்வேறு துறைகளை ஒன்றுடன் ஒன்றை இணைத்து செயலாற்றி வருகிறார்கள்.  ஆனால், வைரஸ் பரவல், முந்தைய வேற்றுமைகளை ஆழமாக்கியதோடு மட்டுமல்லாமல் புதிய சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், பல கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை அன்று ஐ.நா தலைமைச் செயலாளர் குட்ரேஸ் இக்கூட்டத்தொடருக்கு வழங்கிய உரையில் சுட்டிக்காட்டினார்.

அதோடு, புதிய ரக கரோனா வைரஸ் தடுப்பூசிகள் சமமாகப் பயன்படுத்தப்படாமை, உலகம் எதிர்நோக்கும் புதிய பிரச்சினையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.