மெக்சிகோ மக்களுக்கு சீனத் தடுப்பூசி போடும் பணி துவக்கம்
2021-02-23 15:37:21

மெக்சிகோ மத்தியப் பகுதியின் மெக்சிகோ மாவட்டத்தின் எகடபெக் நகரவாசிகள் 22ஆம் நாள் முதல் சீனத் தடுப்பூசிகளைச் செலுத்தி கொள்ளத் துவங்கினர்,

இந்நகராட்சி தலைவர் அன்று செய்தியாளரிடம் கூறுகையில், நலிவடைந்த நிலையில் உள்ள மக்களுக்கு முதலில் தடுப்பூசி போட உள்ளூர் அரசு முன்னுரிமை அளித்துள்ளதாகவும், கரோனா வைரஸ் பரவல் தடுப்பில் சீனாவின் அனுபவங்கள் அதிகம். அதனால் வைரஸ் தடுப்புக்கான இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் அனுபவப் பரிமாற்றம், மேலதிக உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.

மெக்சிகோவுக்கான சீனத் தூதர் ட்சு சிங்சியாவ் அன்று மெக்சிகோ செய்தி ஊடகம் ஒன்றில் வெளியிட்ட கட்டுரையில், இரு நாட்டுத் தடுப்பூசி ஒத்துழைப்பு முக்கிய முன்னேற்றமடைந்துள்ளது. மெக்சிகோ மக்கள் வெகுவிரைவில் வைரஸை வென்றெடுப்பதற்கு சீனத் தடுப்பூசிகள் பங்காற்றும் என நம்புகின்றேன் என்று தெரிவித்தார்.