சீனா பற்றிய பிரிட்டனின் பொய்த் தகவலுக்கு எதிர்ப்பு
2021-02-23 15:29:10

சீனாவின் சின்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரேதசம், திபெத் மற்றும் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசம் பற்றி பிரிட்டன் உள்ளிட்ட  நாடுகள் ஐ·நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் தெரிவித்த தவறான கூற்றுகளுக்கு ஜெனிவாவிலுள்ள சீன நிரந்தர பிரதிநிதிக் குழுவின் செய்தித் தொடர்பாளர் லியூ யுயின் 22 ஆம் நாள் எதிர்ப்பு தெரிவித்தார்.

மனித உரிமையை அரசியல் நோக்கிற்காகவும், பிற நாடுகளின் மீது அவதூறு சுமத்தி அந்நாடுகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்கான கருவியாகவும் பயன்படுத்தக் கூடாது எனக் குறிப்பிட்டார். ஆனால், பிரிட்டன், ஜெர்மனி, டென்மார்க், ஃபின்லாந்து உள்ளிட்ட நாடுகள் மனித உரிமை ஆணையத்தில் சீனா குறித்துப் பொய்யான தகவலைப் பரப்பி அவதூற்றில் ஈடுபட்டுள்ளதோடு, சீனாவின் உள்நாட்டு விவகாரத்திலும் தலையிட்டுள்ளன. இதனைச் சீனா உறுதியாக எதிர்த்து அந்நாடுகளின் பொய்க்கூற்றை முற்றிலும் மறுப்பதாகத் தெரிவித்துள்ளார்.