ஐ.நா மனித உரிமைச் செயற்குழுவின் உயர் நிலைக் கூட்டம்
2021-02-23 09:44:39

சீன அரசவையின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, 22ஆம் நாள் பெய்ஜிங்கில் இருந்து ஐ.நா மனித உரிமை செயற்குழுவின் 46ஆவது கூட்டத்தொடரின் உயர் நிலைக் கூட்டத்தில் இணைய வழி, கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

இவ்வுரையின் போது நூறு ஆண்டுகாலத்தில் கண்டிராத கரோனா வைரஸ் பரவல் நிலைமையிலும், மனித உரிமையைப் பேணிக்காப்பது குறித்து, சீனாவின் 4 முன்மொழிவுகளை அவர் முன்வைத்தார். முதலாவதாக மக்களை மையமாக கொண்ட கருத்தைக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, மனித உரிமை சொந்த நாட்டின் நிலைமைக்குப் பொருந்தியதாக இருக்க வேண்டும். மூன்றாவதாக, பல்வகை மனித உரிமைகளை தொகுதியாக முன்னேற்ற வேண்டும். நன்காவதாக, மனித உரிமை குறித்த சர்வதேச பேச்சுவார்த்தையிலும் ஒத்துழைப்பிலும் ஊன்றி நிற்க வேண்டும் என்று வாங் யீ தெரிவித்தார்.