5வது ஐ.நா சுற்றுச்சூழல் மாநாடு துவக்கம்
2021-02-23 11:14:36

5வது ஐ.நா சுற்றுச்சூழல் மாநாடு பிப்ரவரி 22ஆம் நாள் கென்யாவின் தலைநகர் நைரோபியில் துவங்கியது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், வணிகத் துறையினர்கள், அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் காணொளியின் மூலம் இம்மாநாட்டில் பங்கெடுத்து, கரோனா வைரஸ் பரவல் நிலைமையில் உலகச் சுற்றுச்சூழலுக்கான கொள்கைகள் பற்றி விவாதம் நடத்தினர்.

இயற்கைக்கான நடவடிக்கைகளை வலுப்படுத்தி, தொடரவல்ல வளர்ச்சி இலக்கை நனவாக்குவது, நடப்பு மாநாட்டின் தலைப்பாகும்.

ஐ.நா தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரேஸ் உரை நிகழ்த்திய போது, காலநிலை சீர்குலைவு, உயிரினங்கள் பல்வகைத் தன்மை குறைவு, மாசுபாடு பரவல் ஆகியவை, தற்போதைய முக்கிய 3 சுற்றுச்சூழல் பிரச்சினைகளாகும். இந்நிலையில், பாலைவனமயமாக்கம். கடல் குப்பை, தானியம் மற்றும் நீர் பாதுகாப்பு ஆகிய பிரச்சினைகளை முழு மூச்சுடன் தீர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.