ஐரோப்பிய ஒன்றியத்தின் கரோனா தடுப்பூசி பற்றிய மாநாடு
2021-02-26 15:38:18

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 27 நாடுகளின் தலைவர்கள் பிப்ரவரி 25ஆம் நாள் காணொளியின் மூலம் உச்சி மாநாடு ஒன்றை நடத்தி, கரோனா வைரஸ் பரவல் தடுப்பு பற்றி விவாதித்தனர். கரோனா தடுப்பூசியின் உற்பத்தி, வினியோகம், தடுப்பூசிப் போடுதல் ஆகிய பணிகளை விரைவுபடுத்துவது, தற்போதைய முக்கிய கடமையாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ஐரோப்பிய நாடுகளில் கரோனா தடுப்பூசிகளின் உற்பத்தியை வெகு விரைவில் அதிகரிக்கும் வகையில், ஐரோப்பிய ஆணையம், மருந்து தயாரிப்புத் தொழில் நிறுவனங்களுடனான ஒத்துழைப்புக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து, உற்பத்தி தடையைச் சமாளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிரவும், கரோனா வைரஸின் புதிய திரிபுகள் பற்றியும் இம்மாநாட்டில் விவாதம் நடத்தப்பட்டுள்ளது.