அமெரிக்காவில் 3கோடியே 8லட்சத்துக்கும் மேலானோருக்கு கோவிட்19 பாதிப்பு
2021-04-07 14:52:49

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கிழக்கு அமெரிக்க நேரப்படி 6ஆம் நாள் மாலை 5மணி 20நிமிடம் வரை, அமெரிக்காவில் 3கோடியே 8லட்சத்து 35ஆயிரத்து 220 பேருக்குக் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 5லட்சத்து 56ஆயிரத்து 391ஐ தாண்டியுள்ளது. 24மணிநேரங்களில், இவ்விரு எண்ணிக்கை முறையே 65ஆயிரத்து 851ஆகவும் 1014ஆகவும் அதிகரித்துள்ளன.