மேலும் நியாயமான உலகத்தை உருவாக்க வேண்டும்:WTO வேண்டுகோள்
2021-04-07 17:46:00

ஏர்பல் 7ஆம் நாள் உலக சுகாதார தினம். இதனை முன்னிட்டு, உலகச் சுகாதார அமைப்பு 6ஆம் நாள் வெளியிட்ட செய்திக் குறிப்பில், நாட்டின் உள்புறம் மற்றும் வேறுபட்ட நாடுகளுக்கிடையில் கோவிட்-19 நோய் தொற்று பாதிப்பினால் சுகாதாரம் மற்றும் பொது நலன் துறைகளில் தீவிரமாகி வரும் சமனற்ற நிலையை சமாளிக்கும் விதம் பல்வேறு நாடுகள் அவசர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

சமனற்ற சமூக நிலைமை, சுகாதார அமைப்பு முறைகளுக்கிடையே இடைவெளி ஆகியவை கோவிட்-19 பரவலைத் தூண்டியுள்ளன. பல்வேறு அரசுகளும் சொந்த நாட்டின் சுகாதார சேவையை வலுப்படுத்துவதற்கு நிதி ஒத்துகீடு செய்து, இச்சேவையைப் பெறுவதில் பொது மக்கள் சந்திக்கக் கூடிய தடைகளை நீக்க வேண்டும் என்று உலகச் சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் இச்செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.